×

நெதர்லாந்து அணிக்கு 2வது அதிர்ச்சி வெற்றி!

கொல்கத்தா: வங்கதேச அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், நெதர்லாந்து அணி 87 ரன் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நெதர்லாந்து 50 ஓவரில் 229 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிகபட்சமாக 68 ரன் (89 பந்து, 6 பவுண்டரி), வெஸ்லி பரேஸி 41 ரன் (41 பந்து, 8 பவுண்டரி), சைப்ரண்ட் 35, வான் பீக் 23* ரன் விளாசினர். வங்கதேச பந்துவீச்சில் ஷோரிபுல், டஸ்கின், முஸ்டாபிசுர், மஹெதி ஹசன் தலா 2 விக்கெட், ஷாகிப் அல் ஹசன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 230 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 42.2 ஓவரில் 142 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. மெஹிதி ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். மகமதுல்லா, முஸ்டாபிசுர் தலா 20 ரன், மஹெதி ஹசன் 17, டன்ஸித் ஹசன் 15 ரன், டஸ்கின் அகமது 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

நெதர்லாந்து பந்துவீச்சில் வான் மீகரன் 7.2 ஓவரில் 23 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். டி லீட் 2, ஆர்யன் தத், வான் பீக், ஆக்கர்மேன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். நெதர்லாந்து 87 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்துக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்தது. ஏற்கனவே பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்காவையும் நெதர்லாந்து அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. வான் மீகரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post நெதர்லாந்து அணிக்கு 2வது அதிர்ச்சி வெற்றி! appeared first on Dinakaran.

Tags : Netherlands ,Kolkata ,World Cup League ,Bangladesh ,Eden… ,Dinakaran ,
× RELATED முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல்